--- --:--:-- --

கேஜிஎஃப் நடிகைக்கு இந்த நிலையா?

5

நெல்லையில் அமையவுள்ள நூலகத்திற்கு ‘காயிதே மில்லத்’ பெயர் சூட்டப்படும் என்று திருச்சியில் நடந்த உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

 

பிறகு மாலை திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய 9-ஆம் மாநாடு தொடக்க விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில் முதல்வர் பேசியதாவது: “கடந்த 4 ஆண்டுகளில், சிறுபான்மையின மக்களுடைய சமூக, பொருளாதார, கல்வி நிலைகளை மேம்படுத்துவதற்காக ஏராளமான திட்டங்களை, சாதனைகளை படைத்திருக்கிறோம். அண்மையில்கூட, நங்கநல்லூரில் ‘தமிழ்நாடு ஹஜ் இல்லம்’ கட்டப்படும் என்று அறிவித்தேன். பலரும் என்னிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள்.

 

திராவிட மாடல் அரசில் ஏராளமான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து, இஸ்லாமிய மக்களின் உரிமைகளைக் காக்க குரல் கொடுத்து வரக்கூடிய இயக்கம்தான் தி.மு.க. அதே நம்பிக்கையுடன்தான் நீங்களும் சில கோரிக்கைகளை இந்த மாநாட்டு மூலமாக, தீர்மானங்களாக வடித்தெடுத்து சொல்லியிருக்கிறீர்கள்.

 

அதுவும் என்னுடைய கவனத்துக்கு வந்திருக்கிறது.நெல்லை மாவட்டத்தில் அமையவுள்ள மாபெரும் நூலகத்திற்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும். சென்னைப் பல்கலைக் கழகத்தில், இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வு இருக்கையை தமிழக அரசு ஏற்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். இந்த கோரிக்கையை ஏற்று இதை அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon