அண்ணாமலைக்கு தேசிய அளவிலான பதவி..!
தமிழ்நாடு பாஜக தலைவராக கடந்த நான்கு வருடங்களாக அண்ணாமலை பதவி வகித்துவந்தார். இந்நிலையில், நேற்று பாஜக மாநிலத் தலைவருக்கான தேர்தல் அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து இன்று வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.
அதில், பாஜக எம்.எல்.ஏவும், தமிழ்நாடு சட்டமன்ற பாஜக குழு தலைவராகவும் இருந்துவரும் நயினார் நாகேந்திரன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மாநிலத் தலைவர் பதவிக்கு வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததன் காரணமாக அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
இந்நிலையில், பாஜக மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனைக்காகவும், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தைக்காகவும் இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ள அமித்ஷா கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கி அந்தப் பணிகளை மேற்கொண்டுவருகிறார்.
இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் வேட்புமனு தாக்கல் நேரம் நிறைவடைந்தைத் தொடர்ந்தும், வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததைத் தொடர்ந்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




