--- --:--:-- --

‘தமிழில் அதிகமாக பேச மாட்டேன்’.. நடிகை மடோனா இப்படி கூறினாரா?

7

மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன். இவர் தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த காதலும் கடந்துபோகும் படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் தமிழ் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார். இதை தொடர்ந்து கவண், பா. பாண்டி, வானம் கொட்டட்டும் ஆகிய படங்களில் நடித்தார்.

 

லியோ படத்தில் விஜய்யின் தங்கையாகவும் நடித்திருந்தார். நடிகையை தாண்டி இவர் அருமையான பின்னணி பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், சமீபத்தில் நடிகை மடோனா செபாஸ்டியன் அளித்த பேட்டி ஒன்றில், தமிழ் மொழி குறித்து மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

 

இதில் “எனக்கு தமிழ் ரொம்ப பிடிக்கும். எனக்கு தமிழ் மொழி மீது அளவற்ற பாசம் இருக்கிறது. அதனால் தான் நான் தமிழ் அதிகமாக பேச மாட்டேன். அப்படி பேசினால் கரெக்டாக பேசணும் என்று நினைப்பேன்.

 

அது தப்பாகிவிடக் கூடாதுன்னு நான் என்னை கண்ட்ரோல் பண்ணிப்பேன். தமிழ் மொழி இசை போன்றது, அழகான மொழி” என கூறியுள்ளார்.தமிழ் மொழி குறித்து நடிகை மடோனா செபாஸ்டியன் பேசியது தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon