--- --:--:-- --

20 லிட்டர் குடிநீர் கேன் இலவசம்.. தமிழ் புத்தாண்டுக்கு அறிவிப்பு..!

6

புதுச்சேரியில் குடிநீர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நாள்தோறும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கான் இலவசமாக வழங்கப்படும் திட்டம் தமிழ் புத்தாண்டில் தொடங்கும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் லக்ஷ்மி நாராயணன் தெரிவித்துள்ளார்.

 

புதுச்சேரி சட்டசபையில் கேள்வி நேரத்தின் பொழுது சுயேட்சை எம்எல்ஏ நேரு திமுக எம்எல்ஏ அனிதா உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் உவர்ப்பு தன்மை பல மடங்கு உயர்ந்துள்ளதாக குற்றம் சாட்டினர்.

 

இதற்கு பதில் அளித்த அமைச்சர் லட்சுமி நாராயணன் குடிநீர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நாள்தோறும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன் இலவசமாக வழங்கும் திட்டம் தமிழ் புத்.தாண்டான ஏப்ரல் 16ஆம் தேதி முதல் தொடங்கும் என்றார்

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon