அதிகாலையில் கோர விபத்து.. 3 பேர் உடல் நசுங்கி பலி

விழுப்புரத்தில் பைக் மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது. செஞ்சியை அடுத்த வல்லம் தொண்டி ஆறு அருகே, இன்று அதிகாலை பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி, துடிதுடித்து உயிரிழந்தனர்.

 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து உடனே எந்த தகவலும் வெளியாகவில்லை.