முகூர்த்த நாள்.. பத்திரப்பதிவு செய்ய கூடுதல் டோக்கன்
மாசி மாதத்தில் சுபமுகூர்த்த நாளான நாளை, பத்திரப்பதிவு மேற்கொள்ள மக்கள் அதிகளவில் விரும்புகின்றனர். இதன் காரணமாக அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக, 100 டோக்கன் வழங்கப்படும் சார்-பதிவாளர் அலுவலகங்களில், 150 டோக்கன்களும், 200 டோக்கன் வழங்கப்படும் அலுவலகங்களில், 300 டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




