400 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை வழங்கிய அமைச்சர் சிவசங்கர்..!
அதிமுகவும் பாஜகவும் ஏற்கனவே கள்ளக் கூட்டணியில் இருப்பதாக அமைச்சர் சிவசங்கர் விமர்சித்து இருக்கிறார். பெரம்பலூரில் அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் சிவசங்கர் பங்கேற்று 400 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசையையும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
பிறகு பேட்டி அளித்தவர் சிஎன்ஜி மூலம் அரசு பேருந்துகளை இயக்கம் திட்டம். தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட இருப்பதாக கூறினார். முதல் கட்டமாக 1000 பேருந்துகள் சிஎன்ஜி மூலம் இயங்கும் பேருந்துகளாக மாற்றப்படும் எனவும் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





