2026இல் விசிக இல்லாமல் அரசியல் நகர்வு இல்லை: திருமா
சினிமாவில் காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அங்கீகாரம் தேட முயல்வதாக நடிகர் விஜய்யை திருமாவளவன் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
தருமபுரியில் பேசிய அவர், 35 ஆண்டுகளாக கனவுகளை தொலைத்துவிட்டு ஊருக்காக உழைக்கும் தன்னை யாராலும் விலைக்கு வாங்க முடியாது என ஆவேசமாக பேசினார். மேலும், 2026 தேர்தலில் விசிக இல்லாமல் அரசியல் நகர்வு இல்லை என அவர் யாருக்கோ எச்சரிக்கை விடுக்கும் தொணியிலும் பேசியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




