--- --:--:-- --

பொதுத்தேர்வு விடைத்தாள் விநியோகத்தில் திடீர் மாற்றம்..!

7

மதுரையில் விடைத்தாளை மாற்றி முறைகேடு நடைபெற்ற சம்பவம் எதிரொலியாக விடைத்தாள் விநியோகத்தில் அதிரடி மாற்றம் செய்தும் விடைத்தாளை மாற்றி முறைகேடு செய்யாத வகையிலும் தேர்வுத்துறை புதிய நடவடிக்கை எடுத்துள்ளது.

 

தமிழகத்தில் மார்ச் மூன்றாம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கான பொது தேர்வுகள் துவங்குகின்றன. முதலில் 12 ஆம் வகுப்பு தேர்வு அதை தொடர்ந்து 11 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கான ஏற்பாடுகளை அரசு தேர்வு துறை மும்முரமாக செய்து வருகிறது.

 

தேர்வுகளில் எவ்விதமான முறைகேடுகளும் நடக்காத அளவிற்கு குறிப்பாக விடைத்தாளை மாற்றி எவ்விதமான முறைகேடும் செய்யாத அளவிற்கு இந்த ஆண்டு தேர்வு துறை ஒரு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

 

2023 ஆம் ஆண்டு நடந்த பதினைந்தாம் வகுப்பு தேர்வில் விடைத்தாளை மாற்றம் செய்த முறைகேடு செய்தது. கண்டுபிடிக்கப்பட்டு துறை சார்ந்த அலுவலகம் உள்ளிட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்காக இந்த ஆண்டு தேர்வு துறை ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

 

அதன்படி கடந்த ஆண்டு வரை மாணவர்களுக்கு வழங்கக்கூடிய முதல் விடைத்தாள் நகலை அந்தந்த பள்ளி ஆசிரியர்களை மேல் பக்கத்தில் தைக்கக்கூடிய பணிகள் செய்து வந்தனர். இந்த ஆண்டு அரசு தேர்வு துறையே என நேரடி கண்காணிப்பில் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய அந்த முதல் பக்க விடைத்தாள் முதல் 30 பக்கங்கள் கொண்ட விடைத்தாளை தேர்வு துறையே தைக்க கூடிய பணிகளை செய்து வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon