குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. புகைப்பட்டி கிராமத்தில் பத்து நாட்களாக குடிநீர் இல்லை என புகாரை முன்வைத்து மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





