--- --:--:-- --

பள்ளி மாணவன் பரிதாபமாக பலி..!

4

சென்னை அரும்பாக்கம் அருகே தந்தையின் பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே சென்ற பள்ளி மாணவர் லோடு ஆட்டோ மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரும்பாக்கம் ஜெயின் நகரை தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார்.

 

18 வயதான இவர் அருகில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த நவீன்குமார் தனது தந்தையின் பைக்கை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள கடைக்கு சாப்பிடுவதற்காக சென்று உள்ளார்.

 

ஜெயின் நகர் முதல் தெரு வழியாக சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லோடு ஆட்டோ மோதி தூக்கி வீசப்பட்ட மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு பதிவு செய்திருக்கும் போலீசார் அதே பகுதியை சேர்ந்த லோடு ஆட்டோ ஒன்று சரண்ராஜ் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon