--- --:--:-- --

2 நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் – வானிலை மையம் எச்சரிக்கை

3

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

 

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று மற்றும் நாளை வறண்ட வானிலையே நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அதேசமயம், ஓரிரு இடங்களில், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

 

சென்னையில், அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும், காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.அதேநிலையில், மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்படவில்லை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon