--- --:--:-- --

தடுப்பு சுவரில் மோதி தலைகீழாக கவிழ்ந்த பேருந்து..!

6

கேரளாவில் சாலை தடுப்பு சுவரில் மோதிய தனியார் பேருந்து தலைகீழாக கவிழ்ந்த சம்பவத்தில் 50 பேர் காயமடைந்தனர். கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

 

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் முன்னே சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. பின்னர் சாலை தடுப்புச் சுவரில் மோதிய பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் 50 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவலர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon