--- --:--:-- --

கொரியரில் தங்க நகை அனுப்புவதாக கூறி மோசடி..!

5

திருப்பூர் அருகே மோசடி கும்பலிடம் தன்னை போல் வேறு யாரும் ஏமாறக்கூடாது என்பதற்காக ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஒருவர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செந்தில் குமார். இவர் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணியாற்றி வரும் நிலையில் கடந்த 27ஆம் தேதி பெண் ஒருவர் செல்போனில் அழைத்துள்ளார். தங்கள் பயன்படுத்தும் மொபைல் எண்ணுக்கு குழுக்கள் முறையில் அரை சவரன் தங்க நகை பரிசு விழுந்துள்ளது என்றும் அந்த கொரியரை அனுப்ப ரூ.650 பணம் செலுத்த வேண்டியதையும் கூறுகிறார்.

 

இதை நம்பி ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பணத்தை செலுத்தி உள்ளார். ஆனால் கொரியரில் 100 ரூபாய் மதிப்பிலான கவரிங் நகை தான் இருந்ததால் செந்தில்குமார் அதிர்ச்சி அடைந்தார். சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி அந்த பணத்தை திரும்ப பெற்றுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon