தமிழக பாஜகவின் புதிய தலைவர் யார்?

பாஜக தலைவர் குறித்த அறிவிப்பை கட்சி மேலிடம் விரைவில் அறிவிக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லியில், BJP வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்த பிறகு பேசிய அவர், யார் தலைவர் என்பது முக்கியம் அல்ல, எல்லா தலைவர்களும் ஒரே நேர்கோட்டில் செல்வதால் பிரச்னை இல்லை என்றார்.

 

மேலும், 25 ஆண்டுகளுக்கு பிறகு, டெல்லியில் பாஜக ஆட்சி மலர்வது உறுதி என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.