பார்வையாளர்களைக் கவரும் புகைப்பட கண்காட்சி..!
சென்னையில் நடைபெற்ற சர்வதேச கண்காட்சியில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதில் உலக மக்களின் கலாச்சாரம் வாழ்வியல் பிரச்சனைகள் எடுத்துரைக்கும் வகையில் 200 புகைப்படங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.
இருப்பினும் இதில் சிறப்பு என்னவென்றால் இவை அனைத்தும் குழந்தைகள் கைகளால் கேமராக்களால் படம் பிடிக்கப்பட்டவை.
குறிப்பாக காசாவை சேர்ந்த குழந்தைகள் எடுத்த மனதை கலங்க செய்யும் புகைப்படங்கள் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த குழந்தைகளின் கைவண்ணம் உள்ளிட்டவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் எடுத்த புகைப்படங்களை இடம் பெற்றுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





