--- --:--:-- --

போராட்டம் நடத்தியவர்கள் மீது காவலர்கள் தடியடி..!

5

யூனியன் கார்பெட் ஆலையில் இருந்து எடுக்கப்பட்ட நச்சுக் கழிவுகளை தங்களது பகுதிகளில் வைத்து அளிக்க பீதாங்கூர் பகுதியில் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள யூனியன் கார்பைடு ஆலையில் 1984 ஆம் ஆண்டு விஷ வாயு கசிந்தது.

 

இதனால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 40 ஆண்டுகளுக்கு பின் இந்த ஆலையில் இருந்த நச்சுக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. இந்த கழிவுகளை பீத்தாங்கூர் என்ற பகுதியில் உள்ள மறுசுழற்சி ஆலையில் வைத்து அழிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

 

இந்த நிலையில் நச்சு கழிவுகளை தங்கள் பகுதியில் வைத்து அழிக்க பீதாங்கூர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காவலர்கள் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon