சிட்னி டெஸ்ட்: ரிஷப் பண்டுக்கு சச்சின் பாராட்டு
ஆஸி.,க்கு எதிரான டெஸ்டில் 29 பந்தில் அரைச்சதம் அடித்த ரிஷப் பண்டுக்கு சச்சின் பாராட்டு தெரிவித்துள்ளார். பேட்ஸ்மேன்கள் ஸ்டிரைக் ரேட் 50க்கும் குறைவாக உள்ள சிட்னி ஆடுகளத்தில், 184 ஸ்டிரைக் ரேட் உடன் அவர் ஆடியது ஆச்சரியமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
முதல் பந்தில் இருந்தே ஆஸி., அணியை பண்ட் சிறப்பாக எதிர்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த போட்டியில் 4 சிக்சருடன் 61 ரன்களை பண்ட் குவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




