--- --:--:-- --

சமந்தாவைப் பிரிந்து சோபிதாவை கரம் பிடித்தார் நாக சைதன்யா..!

2

தெலுங்கு பட உலகில் உலகின் இளம் நடிகர் நாகசைதன்யாவை நடிகை சோபிதா துலிபாலாவின் திருமணம் ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. காதல் மனைவியான நடிகை சமந்தாவை பிரிந்த பிறகு நடிகை சோபிதா தூலிபாலாவை நாகசைதன்யா காதலித்து வந்தார்.

 

இதனை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில் திருமணம் ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் சிறப்பாக நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

 

நாக சைதன்யா மற்றும் சோபிதா திருமணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நாகார்ஜுனா தற்பொழுது தான் தனது மகனை சந்தோஷமாக மீண்டும் பார்க்க முடிகிறது என்றும் இது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon