தமிழகத்தின் முக்கிய பால் நிறுவனத்தின் விலை உயர்வு..!
தமிழகத்தில் இன்று முதல் முக்கிய நிறுவனத்தின் பால் விலை உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் முக்கிய நிறுவனத்தின் பால் விலை உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தில் ஆவின் பால் மட்டுமின்றி பல தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகள் விற்பனையாகிறது.அதில் தனியார் நிறுவனமான ஆரோக்யா முக்கிய இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் ஆவின் பாலுக்கு அடுத்து ஆரோக்யா பால் பாக்கெட் பெருமளவில் விற்பனையாகிறது.
இந்த ஆரோக்யா பால், ரூ.10 பால் பாக்கெட்டுகள், அரை லிட்டர் பாக்கெட்டுகள், ஒரு லிட்டர் பாக்கெட்டுகள் என பல்வேறு கொள்ளளவுகளில் விற்பனையாகிறது.இந்த நிலையில் இந்த ஆரோக்யா பால் பாக்கெட்டுகள் ஒரு லிட்டருக்கு ரூ.2 வரை விலை உயர்ந்துள்ளது.
அதாவது ரூ.65 என இருக்கும் ஒரு லிட்டர் பாலின் விலை இன்று முதல் ரூ.67 என விற்பனையாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூலபொருட்களின் விலை உயராத நிலையில், பாலின் விலையை உயர்த்தும் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்நாடு பால் முகவர் சங்க தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




