--- --:--:-- --

தாமரை அரசமைக்கும் காலத்தையும் பார்க்கத்தான் போகிறீர்கள் – அமைச்சர் சேகர்பாபு

2

வருங்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரத்தான் போகிறது. அதைக் கண்டு நீங்கள் அலறத்தான் போகிறீர்கள். என்று தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் போரூரில் 16.60 ஏக்கர் பரப்பளவில் 12 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பில் ஈரநிலை பசுமை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பூங்காவின் பணிகளை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

 

அப்போது, அங்கு குளத்தில் மலர்ந்திருந்த தாமரைப் பூக்களை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், “குளத்தில்கூட தாமரை மலரக் கூடாது” என நகைச்சுவையாகத் தெரிவித்தார். அப்போது அவருடன் இருந்த அதிகாரிகள், அமைச்சரின் பேச்சைக் கேட்டுச் சிரித்தனர்.இந்த வீடியோ வைரலான நிலையில், தற்போது அமைச்சரின் பேச்சுக்கு பதிலடி தெரிவிக்கும் விதமாக தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழிசை, “அரசு அமைக்கும் பூங்காவில் குளத்தில் கூட தாமரை வளரக்கூடாது என ஆவேசப்பட்டு இருக்கிறார் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் சேகர் பாபு.

 

குளத்தில் தாமரை மலர்வதைக் கண்டே அலறுகிறீர்களே… வருங்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரத்தான் போகிறது. அதைக் கண்டு நீங்கள் அலறத்தான் போகிறீர்கள். அரசு அமைக்கும் பூங்காவிலேயே தாமரை வேண்டாம் என ஆவேசப்படும் நீங்கள், தாமரை அரசமைக்கும் காலத்தையும் பார்க்கத்தான் போகிறீர்கள்.

 

நீங்கள் காலம் காலமாக கூவத்தை சுத்தம் செய்வோம் என மக்களை ஏமாற்றுவது மாறி கூவத்தையும் சுத்தப்படுத்தி அங்கேயும் தாமரை மலர மலர் முகத்துடன் மக்கள் காணத்தான் போகிறார்கள். இது வெறும் சத்தமல்ல சத்தியம் சாத்தியம். இலட்சியப் பற்றுள்ள தொண்டர்களாலும் லட்சக்கணக்கில் சேர்ந்த புதிய உறுப்பினர்களாலும் இது சாத்தியம் என்பது சத்தியம்.” என்று தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக, “தமிழ்த் தாயை புறக்கணிப்பது நியாயமா? தமிழக முதல்வர் அண்ணன் முதல்வர் ஸ்டாலின் அவர்களே… அரசு விழாக்களில் தவறாமல் பாடப்படும் தமிழ்த் தாய் வாழ்த்தில் பாடியவர்களின் குறையில் ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என்று சொன்னவர்கள்.

 

உங்கள் அரசு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடாமலே குறை வைத்திருக்கிறீர்களே இந்தக் குறைக்கு நீங்கள் தானே பொறுப்பேற்க வேண்டும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon