அவினாசியில் வட்டார அளவிலான 1 முதல் 8 ம் வகுப்பு வரை நடந்த கலைத்திருவிழா போட்டி
அவினாசி வட்டார அளவிலான 1 முதல் 8 ம் வகுப்பு வரை நடந்த கலைத்திருவிழா போட்டியில் 760 மாணவ, மாணவிகள் பங்கேற்பு..மாவட்ட கல்வி அலுவலர் கோ.பழனி பரிசு வழங்கினார்.
தமிழக அரசு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் அனைவரையும் ஊக்கப்படுத்தும் வகையில், நம் நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாத்து, அவற்றை முறையாக பராமரித்து, பசுமையாக்கி வருங்கால தலைமுறையினரும் பயன்படுத்த வேண்டும் என்ற உயர்வான எண்ணத்தை மாணவர்களுடைய வளர்க்கும் நோக்கில் இக்கல்வியாண்டில் “சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு ” என்ற மையக் கருத்தின் அடிப்படையில் கலைத் திருவிழாவை நடத்த உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் பள்ளி அளவில் மற்றும் குறுவள மைய அளவில் போட்டியில் நடத்தப்பட்டது. இதனையடுத்து வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் தமிழகமெங்கும் நடத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அவினாசி வட்டார அளவிலான கலைத் திருவிழா திருமுருகன்பூண்டி அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இரண்டு நாட்கள் நடந்தது. முதல் நாள் 1 முதல் 5 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும், 2 – வது நாள் 6, 7, 8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கும் நடத்தப்பட்டது.
கலைத் திருவிழா போட்டிகளை தெக்கலூர், காந்தி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரங்கசாமி, அம்மாபாளையம் பள்ளி தலைமையாசிரியர் ராமகிருஷ்ணன், சமத்துவபுரம் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ராமமூர்த்தி ஆகியோர் ஒருங்கிணைந்து போட்டிகளை நடத்தினர். போட்டியில் அவிநாசி வட்டாரத்தில் உள்ள 119 -ல் பள்ளிகளில் இருந்து 750 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வந்தனர்.
போட்டிகளின் முடிவில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்கள் வருமாறு : 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானகதை கூறுதல் போட்டியில் ஆயிகவுண்டம்பாளையம் பள்ளி மாணவர் பூபேஷ், தமிழ் ஒப்புவித்தல் போட்டியில் சமத்துவபுரம் பள்ளி மாணவர்கள் வினோத்குமார், ஹர்சித்வர்ஷினி, வண்ணம் தீட்டுதல் போட்டியில் தெக்கலூர் காந்திநகர் பள்ளி மாணவி கனித்ரா, மாறு வேட போட்டியில் தொட்டக்களாம்புதூர் பள்ளி மாணவர் மித்ரன், ஆங்கிலம் ஒப்புவித்தல் போட்டியில் கருவலூர் பள்ளி மாணவி பிரித்விகா ஆகியோர் முதலிடம் பெற்றனர்.

அதேபோல் 3, 4, 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பேச்சு போட்டியில் நீலிபாளையம் பள்ளி மாணவர் திருமுருகன், களிமண் பொம்மை செய்தல் போட்டியில் கருவலூர் பள்ளி மாணவர் அபிலேஷ், தேசபக்தி பாடல் போட்டியில் அம்மாபாளையம் பள்ளி மாணவி சுபஸ்ரீ, மெல்லிசை தனி போட்டியில் ராவுத்தம்பாளையம் பள்ளி மாணவர் லிபிஷா ராஜ், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் சேவூர் பள்ளி மாணவர் தரணீஷ், மாறுவேட போட்டியில் அவிநாசி பள்ளி மாணவர் பரணி ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
இதே பிரிவில், பரதநாட்டியம் குழு போட்டியில் பூவிதாஸ்ரீ, தெளகிதா, மோஷினி, கோவர்த்தினி, சஷ்வதி ஆகியோர் கொண்ட அம்மாபாளையம் பள்ளி மாணவிகள் குழுவும், நாட்டுப்புற நடனம் குழு போட்டியில் புதுப்பாளையம் பள்ளி மாணவர்கள் குழுவினரும் முதலிடம் பெற்றனர்.
6, 7 மற்றும் 8 வகுப்புகளுக்கான போட்டி முடிவுகளில் ஓவியம் வரைதல் போட்டியில் அவிநாசி பள்ளி மாணவர் மேகனேஸ்வரன், களிமண் சுதை செய்யும் போட்டியில் வடுகபாளையம் பள்ளி மாணவர்
ஸ்ரீதேஷ், மணல் சிற்பம் செய்யும் போட்டியில் காசிகவுண்டன்புதூர் பள்ளி மாணவர் ஹரிஷ், செவ்வியல் இசையில் அம்மாபாளையம் பள்ளி மாணவி சுவேதா, நாட்டுப்புற பாடல் பாடும் போட்டியில் சமத்துவபுரம் பள்ளி மாணவி மதன் திவ்யா ஸ்ரீ, தனிநபர் நடிப்பு போட்டியில் அம்மாபாளையம் பள்ளி மாணவி சம்வர்த்திகா, நகைச்சுவை பேசும் போட்டியில் தேவராயம்பாளையம் பள்ளி மாணவர் ரிஷாந்த், பல குரலில் பேசும் மிமிக்ரி போட்டியில் தெக்கலூர் காந்திநகர் பள்ளி மாணவர் ராஜேஷ் ஆகியோர் முதலிடம் பெற்றனர். அதேபோல் குழு போட்டிகளில் வில்லுப்பாட்டில் மாணவிகள் ஸ்ருதி, ஹேமா, கண்மணி, கலைச்செல்வி, சமீரா பானு ஆகியோர் கொண்ட குழுவினரும், கிராமிய நடனத்தில் ஃபஹீமா பர்வீன், சாதனா, முத்துலட்சுமி, தஸ்வினா, சர்விகா, ஹரிப்பிரியா, பர்னித்தா, மாணவர்கள் மாரீஸ்வரன், கலாம் ஆகியோர் கொண்ட குழுவினர் மற்றும் பரதநாட்டியத்தில் மாணவிகள் ஹரிணா, பிரியதர்ஷினி, காவியா, தனுஸ்ரீ, பிரகதி, பிரதிக் ஷா, ஹனுஷ்யா ஸ்ரீ, சாருஹாசினி ஆகியோர் கொண்ட குழுவினர் என மூன்று போட்டிகளிலும் அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் முதல் இடத்தைப் பிடித்தனர்.
இதனை தொடர்ந்து அவிநாசி வட்டார அளவில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்பட்ட கலை திருவிழாவில் வெற்றி பெற்றவர்களுக்கானபரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவில் அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் கோ. பழனி பேசியதாவது : போட்டியில் நடுவர்களின் பங்கு சிரமமாக இருந்தது. யாரை தேர்ந்தெடுப்பது என அவர்களின் மனதுக்குள் நடந்த போராட்டத்தையும் நான் கண்கூடாக கண்டேன். மாணவர்களின் பல நாள் மேற்கொண்ட பயிற்சியும் முயற்சியும், அவர்களுக்கு ஆசிரியர்கள் தந்த ஆக்கத்தையும், ஊக்கத்தையும் பாராட்டுகிறேன்.
பரிசு பெறாதவர்கள் திறமை அற்றவர்கள் அல்ல. இந்த வாய்ப்பு மீண்டும் கிடைக்கும். அப்பொழுது உங்கள் திறமையை காட்டி முழுமையான வெற்றி அடைய வாழ்த்துகிறேன். 3 வது, 2 வது இடத்திற்கு வந்த குழந்தைகள், முதலாவது வந்த குழந்தையை தேர்ந்தெடுத்ததை மிகச் சரியாக தேர்ந்தெடுத்தார்கள் என்று எண்ணினால் அது நடுவர்களுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். இவ்வாறு அவர் பேசினர். இதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் கோ.பழனி, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் குமார், வட்டார கல்வி அலுவலர் அவிநாசி III திருநாவுக்கரசு, அவிநாசி II சுமதி, நகராட்சி துணைத்தலைவர் ராஜேஸ்வரி பொன்னுசாமி, காந்திநகர் பள்ளி தலைமை ஆசிரியர் ரங்கசாமி, கருமத்தம்பட்டி தமிழ் ஆசிரியர் பால விநாயகம், பூண்டி நகராட்சி கவுன்சிலர்கள் வளர்மதி, லீலாவதி ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்கள்.
முடிவில் சமத்துவபுரம் பட்டதாரி ஆசிரியர் ராமமூர்த்தி நன்றி கூறினார். முன்னதாக நன்கொடையாளர்கள் வழங்கிய மதிய உணவை மாவட்ட கல்வி அலுவலர் கோ.பழனி மாணவிகளுக்கு வழங்கி தொடக்கி வைத்தார். மேலும் இந்த கலைத்திருவிழாவில் முதலிடம் பெற்ற அனைவரும் மாவட்ட அளவில் நடைபெறும் கலைத்திருவிழா போட்டிக்கு தகுதி பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




