போனில் கதறி துடித்த மகன்..கடலூரில் அரங்கேறிய பயங்கரம்..!
கடலூர் மாவட்டத்தில் குடிபோதையில் தகராறு செய்த மகனை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். ஆறுமுகம் என்பவரின் மகன் முத்துசாமி தந்தையின் அனுமதி இன்றி 25 ஆடுகளை விற்றதாக கூறப்படுகிறது.
அதன் காரணமாக தந்தைக்கும் மகனுக்கும் பிரச்சனை இருந்து வந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதால் பெற்ற மகன் என்றும் பாராமல் ஆத்திரத்தில் கத்தியால் குத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





