திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி..காரில் அழைத்துச் சென்ற பொழுது மற்றொரு கார் மோதி விபத்து..!
அரக்கோணம் அருகே லாரி ஓட்டுநர் ராபர்ட் என்பவருக்கு நள்ளிரவில் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து அவரை காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்பொழுது அவரை அழைத்துச் சென்ற கார் மற்றொரு கார் மீது மோதிய நிலையில் அந்த காரில் வந்தவர்கள் ராபட்டின் காரை தடுத்து வாக்குவாதம் செய்தனர். இதனால் கால தாமதமாக அரக்கோணம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ராபர்ட் உயிரிழந்தாக கூறப்படுகிறது.
அவரது உயிரிழப்புக்கு காரணமான தகராறில் ஈடுபட்டவர்களை கைது செய்ய கோரி அரக்கோணம் சோளிங்கர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





