காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக இன்று ஆலோசனை..!
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையே காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 35 வது கூட்டம் அதன் தலைவர் ஹல்தர் தலைமையில் இன்று கூடுகிறது. பிற்பகல் 2:30 மணிக்கு டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரியை சேர்ந்த அரசு பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய கூட்டத்தில் அக்டோபர் மற்றும் நவம்பரில் பங்கீடு தொடர்பாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





