--- --:--:-- --

கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாததால் மக்கள் வேதனை..!

4

சிவகங்கையில் புதிதாக கட்டப்பட்ட இ சேவை மைய கட்டிடம் ஒன்பது ஆண்டுகளாகியும் திறக்கப்படாததால் கிராம மக்கள் அவதி அடைந்தனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த டீசல் பட்டினம் கிராமத்தில் 5-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

 

இவர்களது பயன்பாட்டிற்கு கடந்த 2015 – 16ஆம் ஆண்டில் 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய இ சேவை மையக் கட்டிடம் கட்டப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த கட்டிடம் கட்டப்பட்டு 9 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் புதர் மண்டியும் சேதமடைந்தும் காணப்படுகிறது.

 

இதனால் இந்த பகுதி கிராம மக்கள் வெளியூருக்கு சென்று இ சேவை மையத்தில் பதிவு செய்து வருகின்றனர். எனவே அரசு அதிகாரிகள் இ சேவை மைய கட்டிடத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon