பெங்களூரு அடுக்குமாடி விபத்தில் 2 தமிழர்கள் பலி..!
பெங்களூருவில் கனமழையால் நேற்று அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் உயிரிழந்த 8 பேரில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கட்டட இடிபாடுகளில் ஏழுமலை என்பவர் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களின் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர, அரசு தரப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




