பழுதாகி நின்ற குப்பை லாரியை சாமர்த்தியமாக அப்புறப்படுத்திய ஓட்டுனர்..!
சென்னையில் பழுதாகி நின்ற குப்பை லாரியை ஓட்டுனர்கள் அப்புறப்படுத்திய காட்சி வியப்பை ஏற்படுத்தியது. பேசின் பாலத்தில் மாநகராட்சி குப்பை லாரி ஒன்று பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிக்கபட்டது.
போக்குவரத்திற்கு இடையூறாக நின்றிருந்த குப்பை லாரியை அப்புறப்படுத்துவதற்காக மற்றொரு குப்பை லாரி வரவழைக்கப்பட்டு பழுதான லாரியின் ஓட்டுனர் முன் பக்கம் ஸ்டேரின் ங் உடன் தயாராக இருக்க மற்றொரு லாரியை பின்பக்கமாக இயக்கி தள்ளி சென்றனர்.
லாரி ஓட்டுநர்களின் இந்த சாமர்த்தியமான செயல் காண்போருக்கு புது விதமாக இருந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





