கொலை வழக்கு சான்றிதழை எலி அழித்துவிட்டதாக கூறிய போலீசாரை மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக கண்டித்துள்ளனர். மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரை சேர்ந்தவர் அன்சார் அஹமது. இவருடைய மனைவி கடந்த 2021 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீன் வழங்க கோரி உயர் நீதிமன்றத்தில் அன்சார் மனு தாக்கல் செய்தார். இது பற்றிய விசாரணைக்கு வந்த பொழுது விஜயநகர் காவல் நிலைய அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்பொழுது காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சான்றிதழை எலி அழித்து விட்டதாக போலீசார் கூறியதால் நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
வழக்கு விசாரணையின் சான்றிதழை பாதுகாப்பாக வைக்காததற்கு கடுமையாக சாடினார். மேலும் இதுபோன்று சம்பவங்கள் நடைபெறாத வகையில் காவல் நிலையங்களில் உள்ள அனைத்து சேமிப்பு பகுதிகளையும் ஆய்வு செய்யும்படி அறிவுறுத்தினார்.