--- --:--:-- --

நீட்டால் பறிபோன மாணவியின் உயிர்..!

8

பாரா மெடிக்கல் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு அரசு ஒதுக்கீட்டிற்கான இடம் கிடைக்காததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் ஆனந்தி.

 

இவரது கணவர் செந்தில் குமார் இறந்துவிட்ட நிலையில் கொங்கணாபுரம் பகுதியில் உள்ள பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் புனிதா பிளஸ் டூ வகுப்பில் தேர்ச்சி பெற்று மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்விற்காக பயிற்சி பெற்று வந்தார்.

 

நேற்று முன்தினம் நடைபெற்ற பாரா மெடிக்கல் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் மாணவி புனிதா கலந்து கொண்டுள்ளார். மாணவி புனிதா அவருக்கு நீட் தேர்வு மதிப்பெண் குறைவாக இருந்ததால் அரசு ஒதுக்கீட்டிற்கான இடம் கிடைக்கவில்லை என்று தெரிகிறது.

 

இதனால் மனமுடைந்த மாணவி நேற்று முன்தினம் யாரும் இல்லாத பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சென்ற எடப்பாடி காவலர்கள் மாணவி புனிதாவின் உடலை மெட்ரிக் சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி புனிதாவின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon