பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியையை கடிந்து கொண்ட அன்பில் மகேஷ்..!
மேலூரில் பள்ளிக்கு தாமதமாக வந்த அரசு பள்ளி ஆசிரியையை அமைச்சர் அன்பில் மகேஷ் கடிந்து கொண்டார். வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டு மேம்பாட்டு பணிகளை கேட்டறிந்தார்.
அதன் ஒரு பகுதியாக மேல்மருவூர் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு சென்ற அவர் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்பொழுது பள்ளிக்கு தாமதமாக வந்த அரசு பள்ளி ஆசிரியை கடிந்து கொண்டார்.
இருசக்கர வாகனத்தில் தாமதமாக பள்ளிக்கு வந்த ஆசிரியை நிறுத்தி இதுதான் பள்ளிக்கு வரும் நேரமா? என கேள்வி எழுப்பினார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





