--- --:--:-- --

கனமழை காரணமாக அரசு பள்ளிக்குள் தேங்கிய மழை நீர்..!

3

நீலகிரி மாவட்ட அரசு பள்ளி வகுப்பறைக்குள் தண்ணீர் புகுந்ததால் பள்ளிக்கு வந்த மாணவர்கள் திரும்பி சென்றனர். நேற்று பெய்த கனமழை காரணமாக பரலியார் அரசு தொடக்கப்பள்ளியில் புகுந்தது.

 

மேலும் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை பணிகள் நடப்பதால் அங்கிருந்த மண்ணும் பள்ளிக்குள் புகுந்தது. இதனால் வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகம் முழுவதும் சகதி நிறைந்து காணப்படுகிறது.

 

வழக்கம்போல பள்ளிக்கு வந்த மாணவர்கள் வகுப்பறைக்குள் தண்ணீர் இருப்பதை கண்ட திரும்பி சென்றனர். சாலை பணிகள் காரணமாக மண்ணரிப்பு ஏற்பட்டு மழை நீர் பள்ளிக்குள் புகுந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். உடனடியாக பள்ளியில் தேங்கியுள்ள மழை நீர் மற்றும் மண்ணை அகற்றுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon