--- --:--:-- --

விரிவாக்க பணியின் பொழுது சரிந்து விழுந்த நடைமேடை..!

4

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் விரிவாக்க பணிக்காக பள்ளம் தோண்டப்பட்ட பொழுது நடைமேடை சரிந்தது. 22 கோடி மதிப்பீட்டில் மயிலாடுதுறை ரயில் நிலையம் புனரமைக்கப்பட்டு வருகிறது.

 

அதன் ஒரு பகுதியாக ஒன்றாவது நடைமேடை அருகே உள்ள தபால் நிலையத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு எஸ்கலேட்டர் வசதியுடன் நடை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. அதற்காக அடித்தளம் அமைக்க 15 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

அப்பொழுது பயணிகள் இருக்கை மின்கம்பத்துடன் நடைமேடை சரிந்து விழுந்தது. நல்வாய்ப்பாய் அங்கு அமர்ந்திருந்த பயணிகள் அனைவரும் ரயிலில் ஏறி சென்ற சில நிமிடங்களுக்கு பின் இந்த விபத்து நடந்துள்ளது. அதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

 

அதே சமயம் தற்பொழுது தோண்டப்பட்ட பள்ளத்தால் தபால் நிலைய கட்டிடத்தின் திறன் தன்மையும் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் அங்கு பணி செய்யும் ஊழியர்கள் கலக்கமடைந்துள்ளனர். ரயில் நிலைய கட்டுமானத்திற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில் விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon