--- --:--:-- --

எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..?

3

தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு, கேரளா மற்றும் வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டம் ஆகிய பகுதிகளிலும் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் கன மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 14ஆம் தேதி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon