போலி மருத்துவ சான்றிதழை போட்டோஷாப் மூலம் உருவாக்கிய சீன பெண்ணுக்கு ஷாக்..!

சிங்கப்பூரில் உள்ள அலுவலகத்தில் வேலை செய்து வரும் சீன பெண் ஒருவர் தனது உடல்நிலை சரியில்லாத காரணத்தாலும் அவரது தாயை கவனித்துக் கொள்வதற்காகவும் சில நாட்கள் விடுமுறை எடுக்கலாமென முடிவெடுத்துள்ளார்.

 

அலுவலகத்தில் லீவு எடுக்கலாம் என முடிவெடுத்தவர் அதற்காக போலி மருத்துவர் சான்றுகளை போட்டோஷாப் மூலம் உருவாக்கியுள்ளார். இதனை கண்டுபிடித்த அந்த அலுவலகத்தின் அதிகாரி அவரை உடனடியாக பணியில் இருந்து நீக்கி உள்ளார்.

 

இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சீன பெண்ணுக்கு 3.2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த தீர்ப்பளித்தது.