கோவையில் பிரபல ரவுடி மீது துப்பாக்கிச் சூடு..!
கோவையில் பிரபல ரவுடி ஆல்வின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அவரை பிடிக்க சுற்றிவளைத்தபோது, ஆல்வின் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் தலைமைக்காவலர் ராஜ்குமாரை கத்தியால் குத்தியதால், ஆய்வாளர் கார்த்திகேயன் ஆல்வினை துப்பாக்கியால் சுட்டார்.
ஆல்வினின் இரு கால் முட்டிகளிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை தகவலளித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




