நல்ல நாளில் உதயநிதி துணை முதல்வராவார்: தமிழிசை
உதயநிதி கண்டிப்பாக ஒரு நல்ல நாள் பார்த்துதான் துணை முதல்வராக பதவியேற்பார் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். கோவையில் இன்று பத்திரிகையாளர்களிடையே பேசிய அவர், ‘திமுகவினர் பகுத்தறிவாளர்கள்.
தற்போது நல்ல நாள் இல்லாத காரணத்தால் உதயநிதி துணை முதல்வராக பதவியேற்கவில்லை. கண்டிப்பாக விரைவில் ஒரு முகூர்த்த நாளில்தான் அவர் துணை முதல்வராக பதவியேற்பார்’ என தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




