ஜூஸ்-ல் சிறுநீர் கலந்து விற்பனை..ஆத்திரத்தில் மக்கள் செய்த சம்பவம்..!
உத்திரபிரதேசத்தில் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட ஜூஸில் சிறுநீர் கலக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் தொகுதியில் வாடிக்கையாளர் ஜூஸ் குடிக்க சென்றுள்ளார்.
அப்பொழுது அவருக்கு வழங்கப்பட்ட ஜூஸின் சுவை வேறு விதமாக இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். அப்பொழுது ஜூஸில் சிறுநீர் கலந்து கொடுக்கப்பட்டது தெரியவந்தது.
இதனையறிந்து அங்கிருந்த பொதுமக்கள் சிலர் கடையின் உரிமையாளரையும் அங்கு வேலை பார்ப்பவர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கடை உரிமையாளரை கைது செய்தனர். மேலும் கடையிலிருந்து சுமார் ஒரு லிட்டர் சிறுநீரையும் பறிமுதல் செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





