காரும், வேனும் மோதி விபத்து..பறிபோன 4 உயிர்கள்..!
தேவகோட்டை அருகே சாலை விபத்தில் திரும்பி உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். திருச்சி இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்ற காரும் எதிரே வந்த டெம்போ ட்ராவலர் வேனும் நேருக்கு நேர் மோதியது.
தேவகோட்டை அருகே நிகழ்ந்த விபத்தில் காரில் பயணித்த சிறுமி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காவல்துறையினர் மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





