அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா..!
ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. இன்று நடைபெற்ற காலிறுதியில் தென்கொரியாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது இந்தியா.
இன்றைய ஆட்டத்தின்போது கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் தனது 200வது கோலை அடித்தார். செப்.14ஆம் தேதி நடைபெறும் அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




