திடீரென மாயமான சிறுமி..ஒருவர் கைது..!
15 வயது சிறுமியை கடத்தியதாக நெய்வேலியை சேர்ந்தவரை போக்சோ சட்டத்தின் கீழ் மயிலாடுதுறை காவல்துறையினர் கைது செய்தனர். நெய்வேலி கீழ்பாடு பகுதியைச் சேர்ந்தவர் சேனாதிபதி. திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமியுடன் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.
சேனாதிபதி எச்சரித்ததுடன் மகளையும் மயிலாடுதுறைக்கு அழைத்து சென்றுள்ளனர். காவல்துறையினர் விசாரணை நடத்திய பொழுது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி சேனாதிபதி கடத்திச் சென்றது தெரிய வந்ததை தொடர்ந்து நெய்வேலி பகுதியில் காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சேனாதிபதியை நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





