மேலும் ஒரு வேங்கை வயல் சம்பவம்..இபிஎஸ் கண்டனம்..!
நாமக்கல் அருகே அரசு பள்ளி வளாகத்தில் மனித கழிவு வீசியவர்களை உடனடியாக கைது செய்ய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அம்பேத்கர் நகரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சுற்றிலும் சமையலறையின் கூட்டிலும் சமூக விரோதிகள் மனித கழிவு பூசியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலப்பு ஏற்பட்ட பொழுது இதற்கான உரிய நீதியை அரசு நிலைநாட்டி இருந்தால் இன்று இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





