--- --:--:-- --

பள்ளி மேலாண்மை குழு மறு கூட்டமைப்பு புதிய தலைவராக வக்கீல் முத்துலட்சுமி தேர்வு..!

9

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் முன்னேற்றத்திற்காகவும், நம் பள்ளி குழந்தைகளின் தரமான கல்வியை உறுதி செய்திடவும், அரசு பள்ளிகளை மேம்படுத்தவும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி மேலாண்மை குழு (எஸ்.எம்.சி. ) அமைக்கப்பட்டு செயல்படுத்தி வருகிறது.

 

2 ஆண்டுகள் கடந்த நிலையில் எஸ். எம். சி என்னும் பள்ளி மேலாண்மை குழுவை மறுகட்டமைப்பு செய்து புதிய உறுப்பினர்களை தேர்வு செய்து நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

 

இதனை தொடர்ந்து திருப்பூர் ஜெய்வாபாய் நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை பள்ளி மேலாண்மை குழு மறு கூட்டமைப்பு கூட்டமும், புதிய தலைவர் மற்றும் புதிய உறுப்பினர்களுக்கான தேர்தலும் பள்ளி கலைஅரங்கத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.

 

பள்ளி தலைமை ஆசிரியரும், பள்ளி மேலாண்மை குழு ஒருங்கிணைப்பாளருமான ஸ்டெல்லா அமலோற்பவ மேரி வரவேற்று பேசியதுடன் மேலாண்மைக் குழு குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் விளக்கி பேசினார். பின்னர் தேர்தலில் யார் யார் போட்டியிடலாம், வாக்குகள் மூலம் வாக்களிப்பது குறித்து விளக்கி பேசினார்.

 

இதனையடுத்து குழு உறுப்பினர்கள் தேர்தல் நடந்தது. மாவட்ட திட்ட அலுவலர் அண்ணாதுரை, ராயபுரம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அங்கு லட்சுமி ஆகியோர் தேர்தல் பார்வையாளராக இருந்தனர். முன்னாள் எஸ்.எம்.சி உறுப்பினர் சஃபியுல்லா, சுதா, அய்யப்பன், முன்னாள் மாணவியர் அமைப்பு தலைவர் ருக்குமணி, செயலாளர் பார்த்தீபா ஆகியோர் தேர்தல் மேற்பார்வையாளர்களாக செயல்பட்டனர்.

 

ஜெய்வாபாய் பள்ளி மேலாண்மைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஸ்டெல்லா அமலோற்பவ மேரி, பள்ளி தலைமையாசிரியை புதிய தலைவராக வக்கீல் முத்துலட்சுமி, துணைத் தலைவராக மாற்றுத்திறனாளி பெற்றோர் பிரதிநிதி அஜந்தா, ஆசிரியர் பிரதிநிதியாக அஞ்சுகவதி, 1 முதல் 5 ஆம் வகுப்பு பெற்றோர் பிரதிநிதிகளாக ஜெயந்தி, பவித்ரா, முத்தமிழ்செல்வன், 6 முதல் 8 ஆம் வகுப்பு பெற்றோர் பிரதிநிதிகளாக ராணி, கண்ணன் 9 முதல் 10 ஆம் வகுப்பு பெற்றோர் பிரதிநிதிகளாக சாய்தா பானு, ஷகிலா பானு, தேவா கிருஷ்ணமூர்த்தி, ஜெய மாயகிருஷ்ணன் பிளஸ் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு பெற்றோர் பிரதிநிதிகளாக உமா மகேஸ்வரி, செண்பகராஜ், ராகவன், உள்ளாட்சி பிரதிநிதிகளாக துணை மேயர் எம் கே பாலசுப்பிரமணியம், கவுன்சிலர் திவாகரன், இல்லம் தேடி கல்வியாளர் பிரதிநிதியாக தேன்மொழி, சுய உதவி குழு உறுப்பினர் பிரதிநிதியாக விஷ்ணுபிரியா, முன்னாள் மாணவிகள் பிரதிநிதிகளாக ரதீஷா, பத்மபிரியா, ஆனந்த குமாரி, பெற்றோர் அல்லாத முன்னாள் மாணவ பிரதிநிதியாக உதயதீபா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றனர்.

 

புதிய உறுப்பினர்களுக்கு திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் எம்.கே பாலசுப்பிரமணியம் சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். முடிவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார். கூட்டத்தில் பெற்றோர்கள் ஆர்வமாக திரளாக கலந்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon