--- --:--:-- --

கையில் துப்பாக்கியுடன் நடனமாடிய திகார் சிறை அதிகாரி சஸ்பெண்ட்..!

4

டெல்லியில் கை துப்பாக்கியுடன் நடனமாடிய திகார் சிறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். டெல்லி திகார் சிறையில் உதவி கண்காணிப்பாளராக தீபக் சர்மா பணியாற்றி வந்தார். இவர் ஒரு பிறந்தநாள் பார்டியில் பங்கேற்றுள்ளார்.

 

அந்த விழாவில் நடிகர் சஞ்சீதர் நடித்த கல்நாயக் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலுக்கு தனது கை துப்பாக்கியுடன் நடனம் ஆடினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆனதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon