மாநகரப் பேருந்தில் பயணம் செய்த இளம் பெண் மீது தாக்குதல்..!
சென்னையில் மாநகரப் பேருந்தில் பயணம் செய்த மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் பொறியாளரை தாக்கிய இரண்டு பெண்களைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு நோக்கி சென்ற மாநகர பேருந்தில் இருக்கையில் சண்டை ஏற்பட்டிருக்கிறது.
அப்பொழுது பேருந்தில் கைக்குழந்தையுடன் இருந்த பெண்ணும் அவருடைய தாயும் சேர்ந்து மேற்கு வங்கத்தை சேர்ந்த இளம் பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை தட்டிக்கேட்ட மற்றொரு பெண்ணையும் தாக்கி இருக்கின்றனர். உடனடியாக பேருந்தை நிறுத்திய ஓட்டுனர் தகராறில் ஈடுபட்ட பெண்களை கீழே இறக்கினார்.
அப்பொழுது அங்கிருந்த போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி இருதரப்பினரையும் தாம்பரம் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தாக்குதலுக்கான பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் தாக்குதல் நடத்திய இரண்டு பெண்களிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





