எடைக்கு எடை அரிசி காணிக்கை தந்த அன்புமணி..!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பாமக தலைவர் அன்புமணி, தனது மனைவி சவுமியாவுடன் சாமி தரிசனம் செய்தார். மேலும், ஆடி அமாவாசையை ஒட்டி, துலாபாரத்தில் தனது எடைக்கு நிகராக அரிசியை காணிக்கையாக வழங்கினார்.
கடற்கரைக்கு சென்று கடலில் கால் நனைத்த அவரிடம், சிலர் புகைப்படம் எடுத்துக்கொள்ள முற்பட்டனர். இதைத்தொடர்ந்து அவர் போலீஸ் பாதுகாப்போடு, கோயிலை விட்டு புறப்பட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




