--- --:--:-- --

காவிரியில் இறங்கி நீராட தடை..!

7

டிப்பெருக்கு நாளன்று பவானிசாகர் அணையை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெய்து வரும் கனமழை காரணமாக பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து 744 கன அடியாக அதிகரித்துள்ளது.

 

இந்த நிலையில் ஆடி 18 ஆம் நாள் இன்று ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் பவானிசாகர் அணை பகுதியை பார்வையிடுவது வழக்கம். ஆனால் பவானிசாகர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் ஆடிப்பெருக்கு நாளான ஆகஸ்ட் 3ஆம் தேதி அணையின் மேற்பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

அதே சமயம் ஆடிப்பெருக்கு பண்டிகையின் நாளில் பவானிசாகர் பூங்கா வழக்கம் போல் திறந்து இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon