40 பேர் உட்காரும் இடத்தில் 80 பேர்..பள்ளி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு..!
அரசு பள்ளியில் புதிய வகுப்பறைகள் அமைத்து தரக்கோரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை எடுத்த புதூர் நகர் பகுதியில் அரசு மேல்நிலைப்பகுதியில் மணலி புது நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவு மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இங்கு வகுப்பறைகள் பழுதடைந்துள்ளதாகவும் போதிய வகுப்பறைகள் இல்லாததாலும் நாற்பது பேர் உட்காரும் வகுப்பறையில் 80 பேர் வரை அமர்ந்து கல்வி கற்கும் நிலை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் பள்ளி கழிவறைகளை சுத்தமாக பராமரிக்காததால் கடும் துர்நாற்றம் வீசுவதாக மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
புதிய வகுப்பறைகளை அமைத்து தருமாறு பணி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி தற்பொழுது பெற்றோர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் தங்களது இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்னேரி நெடுஞ்சாலையில் பள்ளி மாணவர்கள் மற்றும் அவரது பெற்றவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





