பேருந்தின் கிளீனரையும் தாக்கியது தொடர்பான அதிர்ச்சி காட்சி..!
மதுரையில் தனியார் பேருந்து ஓட்டுனர் கட்டிவைத்து தாக்கப்படுவது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது பேருந்தின் கிளீனரையும் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி தனியார் பேருந்து நிறுவனத்தில் பணிபுரியும் ஓட்டுநரின் கைகளை கட்டி வைத்து சக ஊழியர்களும் உரிமையாளரும் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பான காட்சிகள் வெளியாகி இருந்தன.
நிறுவனத்திற்கு தெரியாமல் பயணிகளை பேருந்தில் ஏற்றி அந்த பணத்தை தனது வங்கி கணக்கிற்கு ஓட்டுனர் மாற்றியதால் தாக்குதல் நடத்துவதாக கூறப்படுகிறது. ஓட்டுனர் அளித்த புகாரின் பேரில் பேருந்து நிறுவன உரிமையாளர் ராஜசேகர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக பேருந்து கிளினராக பணிபுரிந்து வந்த சிறுவனை ஊழியர்கள் கடுமையாக அடித்து சித்திரவதை செய்துள்ளனர். அது தொடர்பான காட்சிகள் தற்பொழுது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




