ஐடி ஊழியர் குடும்ப கொலை..போலீஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல்..!
கடலூரில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரை மூன்று நாள் காவலில் எடுத்த விசாரிக்க போலீஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. கடலூர் அருகே காராமணி குப்பம் பகுதியில் 3 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த கொலை வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் ஆனந்த் மற்றும் சாகுல் ஹமீது கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கொலை சம்பவத்தின் பொழுது விரல் துண்டிக்கப்பட்ட ஷங்கர் ஆனந்திற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கடலூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் காவல்துறை மனு அளித்துள்ளது. மூன்று நாட்கள் விசாரணைக்கு அனுமதி கூறும் மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





